ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் வெங்காயம், கீரை பக்கோடா: மாலை நேரத்தில் சூப்பர் ரெசிபி!
வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதே தாயின் நோக்கமாகும். ஆனால் குழந்தைகள் கீரை உணவை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை.
கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் கீரை உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
அதுபோலத்தான் வெங்காயத்திலும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை பச்சையாக தினமும் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.
அந்தவகையில், கீரை மற்றும் வெங்காயம் இவை இரண்டையும் சேர்த்து பக்கோடா சேர்த்து செய்தால் எப்படி இருக்கும்.
இந்த வெங்காயக்கீரை பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மா - 200 கிராம்
- அரிசி மா - 50 கிராம்
- முருங்கைக் கீரை - ஒரு கைப்பிடி
- அரைக்கீரை - ஒரு கைப்பிடி
- வல்லாரைக் கீரை - அரை கைப்பிடி
- பெரிய வெங்காயம் - 2
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் பொடி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் எடுத்து கட்டி சேராமல் சிறிதளவு நீரை தெளித்து பிசைந்து கொள்ளுங்கள்.
இதனோடு மூன்று கீரைகளையும் நன்கு நறுக்கி அதில் போட்டு உதிர் உதிராக மாவோடு இணைந்து வரக்கூடிய பக்குவத்தில் நன்கு பிரட்டி நீரை தெளித்து பிசைந்து எடுக்கவும்.
இதனை அடுத்து தேவையான அளவு உப்பு, காரத்திற்காக மிளகாய் தூள், வெங்காயம் இது மூன்றையும் போட்டு நன்கு கலக்கி கொள்ளுங்கள்.
இதனை அடுத்து பாத்திரத்தில் இதனைப் பொறித்து எடுக்க தேவையான அளவு எண்ணெயை விட்டு என்னை நன்கு சூடேறியவுடன் இந்தக் கலவையை பக்கோடா பதத்திற்கு நன்கு பிரட்டி உதிர் உதிராக எண்ணெயில் போடவும்.
இப்போது சூடான சுவையான குழந்தைகள் விரும்பும் கிரிஸ்பி வெங்காய கீரை பக்கோடா ரெடி.