அமெரிக்காவிற்கு சென்றும் சோறுக்காக தடுமாறும் மணிமேகலை: பார்க்கவே பரிதபமாக இருக்கு
நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றிருந்தார் மணிமேகலை அங்கு சோறுக்காக படும் திண்டாட்டத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
வி.ஜே மணிமேகலை
17 வயதில் தொகுப்பாளினியாக மாறிய மணிமேகலை 14 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக இருந்து அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.
அதிலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது. இந்த நான்கு சீசனிலும் கோமாளியாக இருந்த மணிமேகலை விதவிதமாக கெட்டப் போட்டு அனைவரையும் கவர்ந்தவர்.
இவ்வாறு மக்களை விரும்ப வைத்துவிட்டு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து விட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அதே நிகழ்ச்சிக்கு கடந்த வாரங்களில் கோமாளியாக அல்லாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக வந்திருந்தார்.
அமெரிக்காவில் மணிமேகலையின் நிலைமை
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்குவதற்காக மணிமேகலை மற்றும் பாலா சென்றிருந்தார்கள்.
அங்கு சென்றிருந்த வேளையில், இருவரும் நடுரோட்டில் தட்டும் கையுமாக இந்திய சாப்பாடு வாங்கி சாப்பிடுகிறார்கள்.
இருவரும் பாவமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இடைநடுவே பாலா பஞ்ச் டயலாக் சொல்லுவதும் பார்ப்பவர்களை கவலையடைய வைத்திருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |