தக்காளியின் காம்பு பகுதியில் விஷமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
தக்காளியில் உடலுக்கு தேவையான விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. வீட்டில் தினந்தோறும் தக்காளியை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் அதன் காம்பு பகுதியை வெட்டிவிட்டு சமைக்க வேண்டும், அது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்ற கூற்று உள்ளது. இதுகுறித்து மருத்துவர் அருண்குமார் தெளிவான விளக்கமொன்றை கொடுத்துள்ளார்.
அதில், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் தோலில் உள்ள அல்கலாய்டே சொலனின் ஆகும். இதனை அதிகமாக உட்கொண்டால் வயிறு தொடர்பான உபாதைகள், மிக அரிதாக நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், சில நேரங்களில் இறப்பு கூட நேரலாம் என கூறப்படுகிறது.
சொலனின் 100 கிராம் பச்சை தக்காளியில் 100 கிராம் - 20 லிருந்து 30 மில்லிகிராம் என்ற அளவில் இருக்கிறது, பச்சை தக்காளியை நாம் அதிகளவில் பயன்படுத்த மாட்டோம்.
100 கிராம் பழுத்த தக்காளியில் 0.5 மில்லிகிராம் என்ற அளவிலேயே இருக்கிறது. அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 20 கிலோ தக்காளி சாப்பிட்டால் மட்டுமே சொலனின் ஆல் ஏற்படும் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும், இது சாத்தியமில்லாத ஒன்று.
எனவே தக்காளியின் காம்பு பகுதியை சாப்பிட்டால் பிரச்சனைகள் வரும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றேயன்றி வேறில்லை.
தக்காளி சாப்பிடுவதன் நன்மைகள்
தக்காளியில் அதிக அளவில் லைகோபீன் (Lycopene) எனும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடண்ட் உள்ளது. இது உடலை ஹார்ம்படைக்கும் மூலக்கூறுகளிலிருந்து பாதுகாக்கும்.
தக்காளி கொழுப்பை குறைத்து, இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்துக்களை கட்டுப்படுத்துவதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. தக்காளியில் உள்ள வைட்டமின் C மற்றும் பீட்டா-கெரோடின் போன்ற பொருட்கள் சருமத்தை ஒளிரச்செய்யும்.
சீரான உணவு முறையில் தக்காளியைச் சேர்த்தால் முகத்தில் பளபளப்பு காணப்படும். தக்காளி குறைந்த கலோரி கொண்டதுமானதால், எடை குறைக்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாகும்.
இயற்கையான நார்ச்சத்துகள் நிறைந்த தக்காளி, செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்கும்.
தக்காளியில் உள்ள வைட்டமின் A, கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்தி, இரவு பார்வை குறைபாடுகளை தவிர்க்க உதவுகிறது. தக்காளி வைட்டமின் C-ஐ அதிக அளவில் கொண்டிருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
