செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை- வீட்டில் எந்த திசையில் வைக்கணும்
வாஸ்து படி, வீட்டில் கற்றாழை செடியை வைத்திருப்பது மிகவும் மங்களகரமான விடயமாகும்.
இந்த செடியை நடும் பொழுது சில விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக கற்றாழைச் செடியை சரியான திசையில் வைத்தால் மாத்திரமே, அதன் முழு பலனை பெற்றுக் கொள்ள முடியும்.
லட்சுமி தேவியின் ஆசீர்வாதமாக பார்க்கப்படும் கற்றாழை செடியை வீட்டில் வைப்பதால் செல்வம் பெருகும். குடும்பத்திலுள்ளவர்களும் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.
இவ்வளவு சிறப்புக்களை கொடுக்கும் கற்றாழை செடியை எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் மறந்தும் வைக்கக் கூடாது என்பதை பதிவில் பார்க்கலாம்.
எந்த திசையில் நட வேண்டும்?
வீட்டில் கற்றாழை செடி வாங்கி நடும் பொழுது அதனை கிழக்கு பார்க்கும் திசையில் தான் வைக்க வேண்டும். ஏனெனின் லட்சுமியின் வருகை இந்த திசையில் தான் சாத்தியமாகும்.
மன அமைதியை தந்து, வீட்டிலுள்ளவர்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் உயர்த்தினால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகிய பலன்களும் குறைவில்லாமல் கிடைக்கும். அதே போன்று மேற்கு திசையிலும் கற்றாழை செடியை நடலாம்.
எங்கு வைக்கலாம்?
இந்த செடியின் முழு பலனையும் பெற்றுக் கொள்ள மேற்கு திசை உகந்தது என்று சாஸ்த்திர நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள். மேலும் கற்றாழை செடியை தென்கிழக்கு மூலையில் வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
இப்படி ஒவ்வொரு திசையில் வைத்தால் அதற்கு ஏற்றால் போன்று பலன்கள் கிடைக்கும். கற்றாழை செடியை சரியான திசையில் வைப்பது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை கொண்டு வருகிறது.
நிதி பிரச்சனைகள் மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வீட்டில் ஒரு கற்றாழை செடியை சரியான திசையில் வைத்தாலே போதுமானதாக இருக்கும்.
வீட்டில் வளர்க்கப்படும் தாவரங்களில் ஒன்றான கற்றாழை செடியை வீட்டின் பால்கனியில் வைக்கலாம். இதனால் வெளியில் இருந்து வீட்டுக்குள் வர வழி தேடும் எதிர்மறையான ஆற்றல்கள் உள்ளே நுழைய முடியாது.
உடல் நலத்திற்கு ஆதரவாக இருப்பதால் உடல்நலக் குறைவால் அவதிப்படுவர்கள் உங்களின் படுக்கையறையிலும் வைத்துக் கொள்ளலாம்.
எந்த திசையில் வைக்க கூடாது?
வடமேற்கு திசையில் கற்றாழை செடியை மறந்தும் வைக்கக் கூடாது. ஏனெனின் வாஸ்து படி இந்த திசை நிதி பிரச்சனைகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அசுப பலன்களைத் தரும். இதனால் அந்த திசையை தவிர்ப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
