மாம்பழத்தில் சாம்பார் செய்து சாப்பிட்டதுண்டா...
முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். இதில் பல்வேறு ரெசிபிகள் செய்து பார்த்திருப்போம்.
இந்தக் குறிப்பில் மாம்பழத்தைக் கொண்டு எவ்வாறு மாம்பழ சாம்பார் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இனிப்பும் புளிப்புமான மாம்பழங்கள் - 2
அரிசி மா - 1/2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 3 கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
புளி - சிறு எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 1
கடுகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலாவதாக துவரம் பருப்பை நன்றாகக் கழுவி 1 மணித்தியாலம் ஊற வைத்த பின் மசித்துக் கொள்ளவும்.
பின்னர் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி, மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். பின்னர் கடாயில் 2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் பச்சை மிளகாய், நறுக்கிய மாம்பழம், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு என்பவற்றை சேர்த்து வேகவிடவும்.
பழத்துண்டுகள் வெந்ததன் பின்னர் புளியைக் கரைத்து விட்டு, சாம்பார் பொடி சேர்க்கவும்.
அதன் பச்சை வாசனை போனதும் வேகவைத்த பருப்பு சேர்த்து அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கடுகு என்பவற்றை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து சாம்பாரை இறக்கிவிடவும்.