இனி வீட்டிலேயே செய்யலாம் கார துக்கடா
பொதுவாக குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனி என்றால் மிகவும் பிடிக்கும்.
அதை கடைகளில் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலே செய்து கொடுக்கலாம்.
சரி இனி, கார துக்கடா எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா மா - 1 கப்
நெய் அல்லது பட்டர் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
image - you tube
செய்முறை
முதலாவதாக, ஒரு பாத்திரத்தில் பெருங்காயத் தூள், பட்டர், மைதா மா, மிளகாய் தூள், உப்பு என்பவற்றை போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும்.
பின்னர் அதில் தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவாக பிசைந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
அதற்கடுத்ததாக, ஒரு எலுமிச்சம்பழ அளவுக்கு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இட்டு கத்தியால் குறுக்கும் நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, செய்து வைத்திருக்கும் துக்கடாவை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
அருமையான கார துக்கடா தயார்.