மம்முட்டி வீட்டில் ஏற்பட்ட சோகமான சம்பவம்: சோகத்தைப் பகிர்ந்துக் கொண்ட திரைப்பிரபலங்கள்!
பிரபல நடிகர் மம்முட்டியின் வீட்டில் திடீரென ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அவருக்கு திரைப்பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மம்முட்டி
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாரா வலம் வரும் மம்முட்டி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களை நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் தமிழிலும் பல திரைப்படங்கள் ஹிட் அடித்திருந்தது. 1991 ஆம் ஆண்டு தமிழ் சூப்பர் ஸ்டாரும், மலையாள சூப்பர் ஸ்டாரும் இணைந்து நடித்த திரைப்படம் தளபதி அது தான் அவரின் முதல் தமிழ் படம்.
அதற்குப்பிறகு மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் இவர் மட்டுமல்ல இவரின் மகன் துல்கர் சல்மானும் நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார்.
தாயார் மரணம்
சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் 93 வயதான தாயார் பாத்திமா இஸ்மாயில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
வயது மூப்பு காரணமாக சில நோயால் பாதிக்கப்பட்டிருந்த பாத்திமா இஸ்மாயில் இன்று சிகிச்சை பலனிற்றி உயிரிழந்திருக்கிறார். இவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு செம்பை முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
இந்த இறப்புச் செய்தியைக் கேட்டு திரையுலகினர் அனைவரும் மம்முட்டிக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.