குக்வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் திடீர் விசிட் அடித்த துல்கர் சல்மான் - வைரல் ப்ரோமோ
குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியானது செம்ம விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த சமையல் நிகழ்ச்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவர்களின் நடிப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகிறது.
எந்த வேலை இருந்தாலும் இந்த இரு தினங்களில் 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஆஜராகிவிடுகிறார்கள் நம் மக்கள்.
இது பார்ப்போர் தங்கள் கஷ்டங்களை மறப்பதாக சொல்கிறார்கள். இந்த நிலையில், இன்றைய வாரத்தில் நடிகர் துல்கர் சல்மான் திடீரென உள்ளே நுழைந்துள்ளார்.
ஷிவாங்கி பைக்கில் ஒரு ரவுண்டு கூட்டி சென்று லூட்டி அடித்துள்ளார். அவருடன் ஹே சினாமிகா டீம் ப்ரோமோஷனுக்காவும், நடிகை அதிதியும் உள்ளே இருக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது செம்ம வைரலாக பரவி வருகிறது.