உலக அழகியுடன் இணையும் அஜித்: சற்றுமுன் வெளியான அறிவிப்பு
அஜித்தின் அடுத்த படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணிவின் வெற்றி
தமிழ் சினிமாவில் புதிய திருப்பத்தை உருவாக்குவதற்காகவே பொங்கல் தினத்தையோட்டி துணிவு மற்றும் வாரிசு படங்கள் ரிலீஸ் ஆக்கப்பட்டது.
இந்த படங்கள் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை சுமார் 5, 6 நாட்களில் அள்ளிக் கொடுத்துள்ளது.
மீண்டும் இணையும் அஜித் - ஐஸ்வர்யா
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை நயன்தாராவின் கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளராம் மேலும் ஏகே62- திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எதிர் வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியான 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.