பிறந்த நாள் பரிசாக 600 செல்போன்களால் உருவாக்கப்பட்ட மம்மூட்டியின் பிரம்மாண்ட உருவப்படம்; தீவிர ரசிகரின் அசத்தலான செயல்!
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் 70 வது பிறந்த நாள் பரிசாக ரசிகர் ஒருவர் 600 செல்போன்கள் கொண்டு பிரமாண்டமாக உருவப்படத்தை தயார் செய்த காட்சியானது வைரலாகி வருகிறது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்முட்டிக்கு இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
இதையடுத்து, கொடுங்கலூரைச் சேர்ந்த டாவின்சி சுரேஷ் (DaVinci Suresh) என்பவர் நடிகர் மம்மூட்டியின் 20 அடி நீள உருவப்படத்தை 600 செல்போன்களால் 10 மணி நேரத்தில் உருவாக்கி அசத்தியுள்ளார்.
மேலும், செல்போன்கள் மட்டுமின்றி ஸ்கிரீன் கார்டுகள், பவுச்கள், டேட்டா கேபிள்கள், ஏர்போன்கள் என 6000க்கும் மேற்பட்ட உதிரிபாகங்களை அவர் பயன்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அவரின் 70 வது பிறந்தாளின் பரிசாக 600 செல்போன் மற்றும் உதிரி பாகங்களை கொண்டு, உருவப்படத்தை கொண்டு தயாரித்துள்ளோம்.
எனக்கு உதவியாக இருந்த கம்பெனிகளுக்கும் நன்றி, அவரின் தீவிர ரசிகன் நான், அவருக்கு பெரிய அளவில் பாராட்டை தெரிவிக்கவே இதை செய்தேன் என நெகிழ்ந்து பேசியுள்ளார்.
குறிப்பிட்ட வீடியோ காணொளியை இங்கே க்ளிக் செய்துகாணலாம்....