மரணத்தையும் ஏற்படுத்தும் மலேரியா... அறிகுறிகள் என்ன?
மலேரியா நோயின் அறிகுறிகள், அது மனிதர்களுக்கு எவ்வாறு பரவுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மலேரியா
மலேரியா என்பது கொசுக்கள் மூலமாக பரவக்கூடிய நோய் ஆகும். இது பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியினால் ஏற்படும் நிலையில், இது மனிதர்களுக்கு மரணத்தையும் ஏற்படுத்துகின்றது.
மலேரியா கடுமையான காய்ச்சல் நோய். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு அனோபிலிஸ் என்னும் பெண் கொசு கடித்த 10-15 நாட்களுக்கு பிறகு அறிகுறிகள் தோன்றும்.
24 மணி நேரத்தில் சிகிச்சையளிக்காவிட்டால் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் என்னும் கடுமையான நோயாக முன்னேறி மரணம் வரை உண்டு செய்யலாம்.
Image Credit: nechaevkon/Shutterstock.com
நோயை விரைவில் கண்டறிந்து சரியான சிசி்சை அளித்தால் நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த முடியும். அதுவே நோயை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டால், தீவிர சிக்கல்களை ஏற்படுத்தி இறுதியில் இறப்பு வரையும் கொண்டு சென்றுவிடும்.
மலேரியாவை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகள் 5 வகைகள் ஆகும். மலேரியாவை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி வகைகளில், பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரமானது ஒவ்வொரு வருடமும் சுமார் 90% மலேரியா மரணங்களுக்கு காரணமாகிறது.
நோயாளிக்கு மிகைக் காய்ச்சல் என்பது 40 டிகிரி சென்டிகிரேட் அல்லது 104 டிகிரி பாரன்ஹீட் மேலாக ஏற்படக் கூடிய காய்ச்சலாகும்.
அறிகுறிகள் என்ன?
காய்ச்சல்
குளிர்
தலைவலி
குமட்டல் மற்றும் வாந்தி
வயிற்றுப்போக்கு
வயிற்று வலி
தசை அல்லது மூட்டு வலி
சோர்வு
விரைவான சுவாசம்
விரைவான அல்லது வேகமான இதயத்துடிப்பு
இருமல்
கடுமையான பாதிப்பு
கடுமையான இரத்த சோகை
சுவாசக்கோளாறு
பெருமூளை மலேரியா
உறுப்பு செயலிழப்பு
சிறுநீரக செயலிழப்பு
மலேரியா காய்ச்சல் ஏற்பட்டால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். ஏனெனில் இந்த கிருமிகள் சிவப்பணுக்களில் வளர்ந்து பெருகும் நிலையில், இதனால் சிவப்பணுக்கள் அதிகமாக சிதைந்து விடுகின்றது.
இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன், ரத்தத்தில் யூரியா மற்றும் கிரியேட்டின் அளவுகள் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள பல்வேறு தாதுஉப்புக்களின் அளவுகளும் மாறுபடும்.
சிறுநீர் வழியாக ஹீமோகுளோபின் வெளியேறுவதுடன், ரத்தச் சோகை, மஞ்சள்காமாலை ஆகிய பாதிப்புகள் நோயாளிகளுக்கு ஏற்படும்.
இதனால் சிறுநீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் சிலருக்கு முற்றிலுமாகவே சிறுநீர் வெளியேறாமல் கஷ்டப்படும் நிலையும் ஏற்படும்.
நுரையீரைல் நீர் தேக்கம்
மலேரியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரலில் நீர் தாக்குதல் ஏற்படுவதுடன், இதன் காரணமாக நோயாளிகள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டு, தீவிர மூச்சுத்திணறல் காரணமாக இறப்பதற்கும் வாய்ப்புள்ளது.
நோயினால் பாதிக்கப்படுபவர்கள் ஆரம்பத்தில் சுவாசம் அதிகமாக இருக்கும். பரிசோதனை செய்தால், நுரையீரலில் நீர் தங்குதல் ஏற்பட்டிருப்பது தெரியவரும்.
நெஞ்சுப்பகுதி எக்ஸ்ரே மற்றும் பிற பரிசோதனைகளின் மூலம் இந்த பாதிப்பினை அறிந்து கொள்ளலாம்.
மஞ்சள் காமாலை
சிவப்பணுக்களின் நிறமியான 'ஹீமோகுளோபின்" சிதைவடைவதால், அதிலிருந்து 'மஞ்சள் பித்த நிறமியான 'பிலிருபின்' ஏற்படுகிறது. ரத்த சிவப்பணுக்கள் அதிகமாக சிதைவடைவதால் மஞ்சள் காமாலை ஏற்படுவதுடன், மண்ணீரல் மற்றும் கல்லீரலில் வீக்கமும் ஏற்படும்.
நோயாளிக்கு 'மஞ்சள்' நிறமாக சிறுநீரும் வெளியேறும். மலேரியா தொற்று இருந்தால் சிறுநீர் நிறத்தினையும் கவனமாக அவதானிக்க இருக்கும்.
DARIA KULKOVA / GETTY IMAGES
இரத்த சோகை
ரத்த சிவப்பணுக்காள் அதிகமாக சிதைவடையும் போது ரத்த சோகையும் ஏற்படுகின்றது. இவ்வாறான தருணத்தில் ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
நோயாளிக்கு ஏற்கனவே வலிப்பு, மயக்கம், நினைவிழப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதுடன், இந்த பாதிப்புகள் மலேரியாவினால் மூளை பாதிக்கப்படுதினாலேயே ஏற்படுகின்றது.
Image courtesy: Shutterstock
ஆனால் சிலருக்கு மூளை நரம்புகள் பாதிக்கப்படுதல், சிறு மூளை பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். குறிப்பாக, நன்றாக நடக்க இயலாமை, பேச்சு குளறுதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
மூளை பாதிப்பினால், தளர்வாதம் ஏற்படுவதுடன், சிலருக்கு அவர்களது பேச்சு, செயல்பாடு, நடவடிக்கைகளிலும் மாறுதல்களும், ஞாபக மறதியும் காணப்படும்.
ரத்த அழுத்தம் குறையும்
மலேரியா தொற்று காணப்படும் போது நோயாளிகள் அதிகர்ச்சி ஏற்படலாம். இதனால் உடல் குளிர்ந்து காணப்படுவதுடன், நாடித் துடிப்பும் அதிகரிக்கும்.
அதே நேரத்தில் குறைந்த ரத்த அழுத்தமும் காணப்படும். இவ்வாறான அதிர்ச்சி பாதிப்பு 'மலேரியா'வினாலும், அத்துடன் ஏற்படக்கூடிய பல்வேறு நோய்க்கிருமிகளின் பாதிப்புகளினாலும், ரத்தத்தில் 'இக்கிருமிகளில் பாதிப்பு மிகுதியாக இருப்பதாலும் ஏற்படலாம்.
இரத்த சர்க்கரை அளவு
மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் குளுக்கோஷ் அளவு குறைந்துவிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ரத்தத்தில் இந்த கிருமிகள் இருப்பதாலும், இதற்கான நாம் எடுத்துக் கொள்ளும் குளோரோகுவின் மருந்தும் காரணமாக இருக்கும்.
குறிப்பாக, மூளை பாதிப்படைந்தவர்களுக்கு ' ரத்த குளுக்கோஸின் அளவு குறைந்துவிடும். ரத்தத்தில் 'குளுக்கோஸின்' அளவு வெகுவாக குறைவதால், நோயாளி மயக்கமடைந்து சுயநினைவை இழந்துவிடலாம்.
ரத்தத்தில் 'குளுக்கோஸின்' அளவு குறைவதால் அவர்களுக்கு வியர்வை மிகுதல், படபடப்பு, மூச்சுத்திணறல், உடல் அசதி, மயக்கம் போன்றவை ஏற்படும்.
நீர்ச்சத்து குறையும்
மலேரியா நோயாளிகளுக்கு அதிர்ச்சி பாதிப்பு, ரத்த அழுத்தம் குறைவு, சிறுநீர் வெறியேற்றம் குறைதல் இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்தும், தாது உப்புக்களின் அளவும் குறைந்துவிடுகின்றது.
இதன் காரணமாக, தோல் மற்றும் கண்கள் உலர்ந்து போகின்றது. கண்களும் உள்நோக்கி அமைந்ததுபோல இருக்கும். இவர்களின் உடலில் 'அமிலத்தன்மை மிகும். இதன் காரணமாக, நோயாளிக்கு சுவாசம் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |