chickpeas dosa: குழந்தைகளை கொண்டைக்கடலை சாப்பிட வைக்கணுமா? இப்படி தோசை செய்து கொடுங்க
பொதுவாகவே பெரும்பாலானவர்களின் காலை உணவு இட்லி, தோசையாகத்தான் இருக்கும். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட சலிப்பாக இருக்கின்றதா?
கொஞ்சம் வித்தியாசமாக அருமையான சுவையில் கொண்டைக்கடலை தோசையை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த முறையில் தோசை செய்தால் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக்கடலை - 2 கப்
இட்லி அரிசி - 2 கப்
வெந்தயம் - 1 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் கொண்டைக்கடலை மற்றும் 2 கப் இட்லி அரிசியை எடுத்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அவை முழுமையாக மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, வெந்தயத்தை சேர்த்து குறைந்தது 8 மணிநேரம் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
நன்றாக ஊறிய பின்னர் அவற்றை மிக்சர் ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின் அரைத் தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தெவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொண்டு அந்த மாவை குறைந்தது 8 மணிநேரம் வரையில் புளிக்கவிட வேண்டும்.
பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், மாவை தோசையாக ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கொண்டைக்கடலை தோசை தயார்.
இதில் கொண்டக்கடலை சேர்ப்பதால் வெறும் தோசையை சாப்பிடுவதை விடவும் அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றது.கொண்டைகடலை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளும் கூட இந்த முறையில் தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |