சாதம் குழையாமல் எடுக்கணுமா? இந்த Tips ஐ Follow பண்ணுங்க
தமிழர்களின் முடுதன்மையான உணவு என்றால் அது சோறு தான். பெரும்பாலும் உணவங்களில் நாம் அனைவரும் பஞ்சு போல மென்மையாகவும், உதிரியாகவும் சாப்பிடுவோம்.
ஆனால் அதே மாதிரி நாம் வீட்டில் சமைக்க முயற்சித்தால் நிச்சயமாக நாம் சமைக்க தெரியாமல் தடுமாறுவோம்.சாதம் தயாரிப்பது எளிதானது, ஆனால் பெரும்பாலான மக்கள் அதைச் சரியாகச் செய்யத் தவறி சாதத்தை பொங்கலாக மாற்றுகிறார்கள்.
சாதத்தை சரியாக சமைக்க, சரியான அளவு தண்ணீர் மற்றும் சரியான அரிசியை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வீட்டில் சாதத்தை ஹோட்டலில் சமைப்பது போல சிறப்பாக சமைக்க உதவும் சில பயனுள்ள குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
சாதம் குழையாமல் இருக்க
நாம் சாதம் சமைக்க சரியான அரிசியை தேர்ந்தெடுக்க வேண்டும். அரிசி சிறியதாக இருந்தால் சோறு ஒன்றுடன் ஒன்று ஒட்டும்.அதேசமயம், நீளமான அரிசி ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும்.
மல்லிகை அல்லது பாசுமதி அரிசி ஒட்டாது. ஏனெனில் வெள்ளை அல்லது குட்டையான அரிசியில் மாவுச்சத்து அதிகம் மற்றும் பாஸ்மதி அரிசியில் மாவுச்சத்து மிகக் குறைவு. இதன் பின்னர் அரிசியில் நாம் தண்ணீர் சேர்ப்பது மிகவும் முக்கியம்.
பொதுவாக 1 கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் போதுமானது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மைக்ரோவேவ் அல்லது அடுப்பில் அரிசி தயாரிக்கிறீர்கள் என்றால், தண்ணீரின் அளவு 2 கப் இருக்கு வேண்டும்.
இதனுடன் அரிசியை எவ்வளவு நேரம் ஊற வைக்கிறீர்கள் என்பதும் முக்கியமானது.இது அரிசி சமைக்கும் நேரத்தைக் குறைக்கிறது மற்றும் அரிசி வேக குறைவான தண்ணீரே போதுமானது.
பானையில் அல்லது பாத்திரத்தில் அரிசியை வேகவைத்தால், 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து, அது ஒரு கொதி வரும் வரை சமைக்கவும். அதன் பிறகு, அரிசியை 2-3 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்.
இதன் பின் சதவீதம் வெந்ததும், தீயை அணைத்து, அரிசியை 2 நிமிடம் மூடி வைக்கவும். இந்த படிமுறைகசளை செய்தால் உதிரி உதிரியாக சாதம் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |