உடலில் இந்த 5 அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை... இதயம் ஆபத்தில் இருப்பதாக அர்த்தம்!
தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் நிகழும் அதிக இறப்புகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளே முக்கிய காரணியாக திகழ்கின்றது.
ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை பார்த்தல், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதியளவு தூக்கமின்மை, முறையற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், மனஅழுத்தம், அதிகரித்த உடல் பருமன் போன்ற பல்வேறு காரணிகள் மாரடைப்பு உள்ளிட்ட இதய கோளாறுகளுக்கு வித்திடுகின்றது.

பொதுவாக மாரடைப்பானது இதய தசையின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது ஏற்படுகிறது .இதனால் இதயத்தின் அந்த பகுதியில் சேதம் அல்லது இறப்பு ஏற்படுகிறது
இந்த அடைப்பு பொதுவாக இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் கரோனரி தமனிகளில் கொழுப்பு படிவுகள் (பிளேக்) குவிவதால் ஏற்படுகிறது.

அந்தவகையில், மாரடைப்பு ஏற்படப்போவதை எச்சரிக்கும் முக்கிய சில அறிகுறிகள் குறித்தும், இதய கோளாறுகள் இருப்பதற்னகான எச்சரிக்கை அறிகுறிகள் தொடர்பிலும் விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக சோர்வு

இதய ஆபத்தை எச்சரிக்கும் முக்கிய அறிகுறியாக அதிக சோர்வு அறியப்படுகின்றது. அதாவது போதுமான அளவு ஓய்வெடுத்த பின்னரும் கூட வழக்கத்திற்கு மாறான சோர்வை உணர்கின்றீர்கள் என்றால் இது குறித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
இதயம் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி, ஆக்சிஜன் செறிந்த இரத்தத்தை உடல் முழுவதும் பாய்ச்சுவதற்காகக் கடுமையாக உழைப்பதால் இந்த சோர்வு ஏற்படுகிறது. அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக கூட இருக்கலாம்.
மூச்சுத்திணறல்

இதயம் சரியாகச் செயல்படாமல் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகளில் முக்கியமாகது தான் மூச்சுத்திணறல். இது இதயத்தின் இரத்தத்தை விநியோகிக்கும் திறன் பலவீனமடையும்போது, இரத்தம் நுரையீரல்களுக்குள் பின்னோக்கித் தேங்கக்கூடும். இதன் விளைவாகவே மூச்சு விடுவதில் சிறமம் ஏற்படுகின்றது. அந்த நிலை காரணமின்றி ஏற்பட்டால் இது குறித்து மருத்துவ விளக்கம் அவசியம்.
திடீர் தலைச்சுற்றல், குமட்டல்

அடிப்படி திடீர் தலைச்சுற்றல், குமட்டல் அல்லது வயிறு உப்புசம் போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், இது மாரடைபின் எச்சரிக்கை அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது. இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு நரம்பு மண்டலம் வினைபுரியும்போது, இந்த அறிகுறிகள் ஏற்படும். எனவே இந்த அறிகுறிகளை அல்ட்சியப்படுத்துவது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடும்.
தூங்குவதில் சிரமம்

தூங்குவதில் அசௌகரியமான நிலையை தொடர்ந்து அனுபவிக்கின்றீர்கள் என்றால் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம். நோயாளிகள் திடீரென்று அமைதியின்மையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீரற்ற நிலை மற்றும் இதயம் சரியாக செயல்படாமை ஆகியவையே இந்த அறிகுறிகளுக்கு காரணம்.
மார்பில் வலி

மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளில் முக்கியமானது தான் மார்பு வலி. பெரும்பாலானவர்கள் மார்புவலி பற்றி பெரிதாக கவனம் செலுத்துவது கிடையாது. காரணம் இது அதிகப்படியாக வேலை செய்யும் போது பலருக்கும் ஏற்படுவதால் இதனை அலட்சியப்படுத்துகின்றார்கள்.
மாரடைப்பு கடுமையாக வலியுடன் தான் ஏற்படும் என்ற தவறான புரிதல் பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்டுகின்றது. ஆனால் தொடர்ந்து மார்பு பகுதியில் லேசான வலி இருப்பதும் மாரடைப்பு உட்பட இதய கோளாறுகளை எச்சரிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |