ரவீந்தர்க்கு திடீர் உடல்நலக்குறைவு- அடுத்த நாளே அவர் வெளியிட்ட புகைப்படம்
பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
லிப்ரா புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனமொன்றை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், ‘சுட்டகதை’, ‘நட்புனா என்னான்னு தெரியுமா’, ‘முருங்கக்காய் சிப்ஸ்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
படங்கள் தயாரிப்பதையும் தாண்டி பிக்பாஸ் விமர்சனங்கள் போன்ற இவரது பேச்சுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
இவரும், சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் கடந்தாண்டு செப்டம்பர் 1ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர், இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும்.
திருமண புகைப்படங்கள் வெளியான நொடியிலிருந்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தது, இருவரது உருவத்தோற்றத்தையும் ஒப்பிட்டு பலரும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினர்.
பணத்திற்காகவும், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் மகாலட்சுமி, ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக கூறினர், ஆனால் ”நாங்கள் வாழ்ந்து காட்டுவது மட்டுமே” இதற்கான பதிலடி என இருவருமே கூறிவிட்டனர்.
இந்நிலையில் அவ்வப்போது இருவருமே இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இருதினங்களுக்கு முன்னர், உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதாகவும், டயட்டில் இருப்பதாகவும் பதிவிட்டார் ரவீந்தர்.
இதற்கு பலரும் கமெண்டுகளை பதிவிட, மறுநாளே மனைவி மகாலட்சுமி, மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ”என்னுடைய சந்தோஷம்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழகான குடும்பம் பல்லாண்டு வாழ வேண்டும் என பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.