தனி விமானத்தில் ஹனிமூன் சென்றார்களா? மனைவியுடன் ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம்
தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமியுடன் விமானத்தின் முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் விஜே மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையல், பெரும் வைரலாகியும் வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜே மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்தர் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ததோடு, பல போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
இதுமட்டுமில்லாமல் பல சேனல்களுக்கு இருவரும் பேட்டி அளித்து வருவதோடு, கேலி செய்யும் நெட்டிசன்களுக்கு தக்க பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.
தனிவிமானத்தில் ஹனிமூனா?
தங்களது ஹனிமூன் குறித்து பேசுகையில், வருகிற நவம்பர் மாதம் ஐரோப்பா அல்லது லண்டனுக்கு ஹனிமூன் கொண்டாட செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது தனது மனைவியுடன் விமானத்தின் முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு முக்கிய வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியுடன் தனி விமானத்தில் பெலைஸ் தீவுக்கு ஹனிமூன் சென்றார். தயவு செஞ்சு அப்படி போட்றாதீங்க.
திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் கிட்ட குலதெய்வம் கோவிலுக்கு போறேன். இந்த போட்டோவை ஸ்கிரிப்டா செஞ்சிடாதீங்க என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் கோவில் முன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, “எண்ணுடுய குலம் செழிக்க வந்தவள் நீ. இனி துவங்கலாம் குல தெய்வத்தின் அருளோடு. நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு நன்றி.
நம்மை வெறுக்கும் உலகத்துக்கு மிக்க நன்றி. ஒரு நாள் உங்களை நாங்கள் நேசிக்க வைப்போம்... என்றும் உங்கள் ரவி & மிஸஸ் ரவி” என குறிப்பிட்டுள்ளார்.