அம்முக்கு பிறந்த நாள்.. ரவீந்தர் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? காதல் வெள்ளத்தில் நனைந்த மகாலட்சுமி
பிறந்த நாளுக்காக ரவீந்தர் கொடுத்த இன்ப அதிர்ச்சிக்கு மகாலட்சுமி பார்ப்பவர்கள் வியந்து போகும் படி ரிப்ளை ஒன்றை கொடுத்துள்ளார்.
சின்னத்திரையின் குயின்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.
இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.
அலப்பறைகளை குவிக்கும் ரவீந்தர்
இந்த நிலையில் மகாலட்சுமி பிறந்த நாளை முன்னிட்டு ரவீந்தர் மனைவிற்கு மல்லிகைப்பூ பரிசாக கொடுத்துள்ளார்.
மேலும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கி உனக்கு நான் பரிசாக கொடுப்பதை விட என்னுடைய அன்பிற்கு நிகாரன இந்த பூவை உனக்கு கொடுப்பதன் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இதனை தொடர்ந்து “I love you mahalakshmi, Happy birthday” எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள்,“ வர வர உங்களின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை” என கலாய்த்துள்ளார்கள்.