முட்டாள் தனமான மக்கள் அதிகம் வாழும் நாடு எது தெரியுமா? இந்தியாவுக்கும் இடம் இருக்காம்..
பொதுவாக இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விடயத்தில் திறமைசாலிகளாக இருப்பார்கள்.
திறமை இருந்தும் முயற்சிக்காதவர்கள் பலர் இங்கு இருக்கிறார்கள். தன்னால் இயலாத போதும் ஏதாவது ஒரு வகையில் முயற்சிப்பவர் இவ்வுலகின் சாதனையாளராக பார்க்கப்படுகிறார்கள்.
IQ அளவீட்டை வைத்து ஒருவரின் நுண்ணறிவை அளவிட முடியும். அதே சமயம் அவர்களின் அறிவாற்றலையும் பார்க்க முடியும்.
அப்படி அளவிடும் பொழுது 70ற்கும் கீழ் ஒருவரின் IQ அளவு இருந்தால் அவர்களின் அறிவாற்றல் குறைவாக இருக்கிறது என்றும் 130ற்கும் மேல் இருந்தால் அறிவுசார் திறன் அதிகமாக உள்ளது என்றும் அர்த்தமாகிறது.
அந்த வகையில், IQ லேவல் குறைந்த மக்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலை தொடர்ந்து எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

1. தெற்கு சூடான்
IQ லேவல் மிக குறைவாக இருந்த நாடுகளில் தெற்கு சூடானும் ஒன்று. இங்கு வாழும் மக்களின் சாதாரண IQ லேவல் 61.63 ஆகவே உள்ளது. இதன்படி பார்க்கும் பொழுது 188 வது இடத்தை பிடிக்கிறது. நீண்ட கால மோதல்கள் இந்த நாட்டில் அதிகமாக இருக்க இதுவே காரணமாகும்.
போதுமான அளவு கல்வி வளங்கள் இல்லாமை, இடப்பெயர்வு, கடுமையான உணவு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கும் IQ லேவல் குறைவாகவே உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2. சியரா லியோன்
சியரா லியோன் நாட்டில் வாழும் மக்களின் IQ லேவல் 62.20 மதிப்பெண் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த நாடு புத்திசாலிகள் குறைவாக வாழும் நாடுகளின் பட்டியலில் 187-வது இடத்தை பிடிக்கிறது.
இது குறித்து தேடிப் பார்த்த பொழுது அளவுக்கு அதிகமான வறுமை மற்றும் பொதுக்கல்வி முறை ஆகியன முக்கிய பிரச்சினைகளாக உள்ளது. உள்நாட்டு பேரழிவு தாக்கங்கள் இதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கு போதுமான வசதிகள் இல்லாமல் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.

3. காம்பியா
காம்பியாவில் வாழும் மக்களின் IQ மதிப்பெண் 62.21 ஆக பார்க்கப்படுகிறது. பக்கத்து நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்வதற்கே போராடி வரும் நிலையில், குழந்தைகளின் கல்வித் தரம் மற்றும் பள்ளி அணுகல் பாதிக்கப்படுகிறது. இதுவே காம்பியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |