நகம் நொருங்குதா? அப்போ இந்த நோய் உங்களுக்கு இருக்கலாம்
பொதுவாக ஒருவருக்கு என்ன நோய் வந்தாலும் உடனே மருத்துவர்கள் அவர்களின் நகங்களை தான் பார்ப்பார்கள். ஏனெனின் உடலில் ஏதாவது பிரச்சினை வந்தால் அதன் பிரதிபலிப்பு உங்களுடைய நகங்களிலும் இருக்கலாம்.
தலைமுடி, முகம் போன்று நகங்களை சரியாக பராமரிக்க வேண்டும். அழகு நிலையங்களில் நகங்களை அலங்கரிப்பதற்காகவே தனி விலை உள்ளது.
இப்படி அழகு நிலையங்களில் நகங்களை அலங்கரித்து கொள்ளும் சமயத்தில் உங்களுக்கு உடல் நல பிரச்சினைகளை கண்டுபிடித்து கொள்ள முடியாமல் போகும்.
நாளாந்தம் உங்களின் நகங்களின் நிறம் மற்றும் மாற்றங்கள் அனைத்தையும் கவனிப்பது அவசியம். அதில் ஏற்படும் மாற்றங்களை அறிகுறிகளாக வைத்து கொண்டு உங்களுக்கு வரப்போகும் நோய்களுக்கு முன்னரே வைத்தியம் செய்ய முடியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில், சிலரின் நகங்கள் பார்க்கும் பொழுது மிகவும் மோசமாக இருக்கும். உதாரணமாக, அவர்களின் நகங்கள் பார்ப்பதற்கு நொருங்கி போனது போன்று இருக்கும். அப்படி நொருங்கியிருந்தால் என்ன நோய்க்கான அறிகுறியாக இருக்கும் என்பதை தொடர்ந்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

ஏன் நொருங்கும்?
1. உங்களின் நகங்கள் உடைந்து பார்க்கவே பரிதாபமாக உள்ளதா? அப்படியானால் உங்களின் நகங்கள் பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமாகும். இதன் காரணமாக உங்களது நகங்கள் வளர வளர நொருங்கும். உங்களுக்கு இதனால் வலியுடன் சேர்ந்து துர்நாற்றமும் வெளியேறும். அப்படியான உடனடியாக மருத்துவரிடம் சென்று பார்ப்பது சிறந்தது.
2. போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாவிட்டால் அதனை உங்களது நகங்களில் பார்க்கலாம். நகங்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலில் குறைவாக இருக்கும் சமயத்தில் உங்களது நகங்கள் நொருங்குதல் அல்லது உடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

3. நோய் நிலைமைகள் காரணமாக சிலர் தினமும் மருந்துவில்லைகள் எடுத்து கொண்டிருப்பார்கள். அவர்களது நகங்கள் நொருங்குதல் அல்லது உடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.ஏனெனின் அந்த மருந்தின் தாக்கம் மற்ற உறுப்புக்களிலும் இருக்கும். இது குறித்து முன்னரே எச்சரிக்கையாக இருப்பது சிறந்தது.
4. உங்களை அறியாமல் திடீரென எங்கையாவது சென்று இடித்து கொண்டாலும் அல்லது காயம் ஏற்பட்டாலும் நகங்கள் உடையும். நகங்கள் கண்ணாடி போன்றது சற்று அழுத்தமான ஏதாவது பட்டாலும் உடைந்து விடும். அதனை பாதுகாப்பாக பார்த்து கொள்வது உங்களின் கடமைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

யோசிக்காமல் இதை பண்ணுங்க..
உங்களின் நகங்களில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படும் பொழுது எதையும் யோசிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை எடுத்து கொள்ளுங்கள். நகங்கள் உடைவதற்கான காரணத்தை தெரிந்து கொண்டால் அதற்கான சிகிச்சை இலகுவாக கொடுக்கலாம். தலைமுடி, முகம் போன்று நகங்களும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டிய விடயமாகும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |