Viral video: வீட்டுக்குள் அரண்டு போய் ஓடும் சிறுமி.. சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்- நடந்தது என்ன?
வீட்டுக்குள் தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமி சற்று நேரத்தில் அரண்டு போய் வீட்டுக்குள் ஓடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தற்போது நமது சமூகத்தில் சிறு வயது பெண் குழந்தைகளை தொந்தரவு செய்யும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக விட்டது.
அதிலும் குறிப்பாக இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் நடக்கும் சில சம்பவங்கள் பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களை கதிகலங்க வைக்கிறது.
இளம் வயது பெண்களை தொந்தரவு செய்யும் காலம் சென்று, தற்போது பெண் என்று எழுதி இருந்தாலும் துஷ்பிரயோகம் செய்யும் நபர்கள் அதிகமாகி விட்டனர். தனியாக வெளியில் செல்வது சவாலாக மாறி விட்டது.
சட்டென முன்னே வந்த மர்ம நபர்
இந்த நிலையில், வீட்டுக்குள் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த சிறுமியொருவர், சில நிமிடங்களில் அம்மா என கத்திக் கொண்டே வீட்டுக்குள் பயந்து ஓடுகிறார். இது குறித்து சிசிடிவியில் பார்த்த பொழுது மிகப் பெரிய உண்மை தெரியவந்துள்ளது.

அதாவது, சிறுமி தன்னை மறந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, யதார்த்தமாக மர்ம நபர் ஒருவர் அந்த பக்கமாக செல்கிறார். அதன் பின்னர், குறித்த மர்ம நபர் சிறுமிக்கு முன் வந்து நிற்கிறார்.
வீட்டின் முன் கேட் மூடி இருந்தாலும், சிறுமி பயத்தில் அம்மா என கத்தியவாறே உள்ளே ஓடுகிறார். சிறுமி உள்ளே ஓடியதும் அந்த மர்ம சிறு நேரம் காத்திருந்து விட்டு, அங்கிருந்து செல்கிறார்.
அவர் யார் என்ற விவரங்கள் சரியாக விளங்கவில்லை. ஆனாலும் இரவு நேரத்தில் குறித்த மர்ம நபர் சிறுமியின் முன் வந்து நிற்பதற்கான காரணம் தெரியவில்லை. இது போன்று பாதுகாப்பற்ற சமூகத்தில் உங்கள் வீட்டு குழந்தைகளை பாதுகாப்பது உங்களின் தலையாய கடமையாக உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |