வாழ்க்கையை அழகாக்க வேண்டுமா? அப்போ இத ஃபாலோ பண்ணுங்க!
By Sinduja
- அஞ்சிக்கொண்டும் வாழாதே...கெஞ்சிக்கொண்டும் வாழாதே...உனக்கான வாழ்க்கையை வாழ்!
- பிரச்சினை என்பது தொலைநோக்கி போலவே...நீ பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது. அதை பெரிதாக நினைத்தால் பெரிதாகத்தான் தோன்றும் சிறியதாக நினைத்தால் பிரச்சினை உனக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.
- உணர்ச்சிகள் என்ற ஒன்றை உனக்கு அடக்க தெரிந்தால் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்ட நஷ்டங்களாலும் உன்னை ஒன்றும் செய்துவிட முடியாது.
image - zabbala innovation
- நேரம் வரட்டும் செய்யலாம் என்று காத்திருப்பதும் காலம் வந்தால் எல்லாம் தன்னாலே கிடைக்கப்பெறும் என்ற மூட நம்பிக்கையோடு கனவு காண்பதும் ஒருபோதுமே உன் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல.
- ஒருவரை கண்டு நன்றாக வாழ்ந்தால் அவர்கள்போல் தான் வாழ வேண்டும் என்று தானே நினைக்கிறார்கள் தவிர, எவரும் அவர்களைப் போலவே நாமும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை.
- அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம். ஆனால், உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது உனக்கு ஒரு கிடைக்காத பொக்கிஷம்.
image - whiteark
- பட்டை தீட்ட தீட்டதானே தங்கம் உருவாகும். அதுபோலவே வாழ்க்கையின் இன்னல்களை கடந்து வந்தால் மட்டுமே உன் சாதனை இந்த உலகில் நிஜமாகும்.
- இலட்சியம் என்ற ஒன்று எதுவும் இல்லாதவன் இந்த உலகை ஜெயிக்க தகுதி இல்லாதவன்.
- வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதே உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்.
- நீ ஒருவருக்கு ஆயிரம் விதத்தில் உதவியிருக்கலாம். ஆனால், ஒருமுறை அவர் உன்னிடம் கறை கண்டிருப்பின் அந்த கணத்தில் நீ செய்த உதவிகள் அனைத்தையும் மறந்து போவார்கள். இதுதான் உலகம்.
image - unsplash
- அதிர்ஷ்டம் கூட சில சமயம் கிடைக்கும் என்று நினைப்பவன் கையிலே சென்றடையும் எனவே, எதை செய்தாலும் அதன் மீது பற்றாக இரு...துணிந்து நிமிர்ந்து போராடு!
- வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற சிந்தனை உனக்குள் வந்துவிட்டாலே பொறுப்பு என்பது தன்னாலே அமைந்துவிடுகிறது.
- வாழ்க்கை தேடல்களுக்கான சிறந்த விடை உன் அனுபவங்களால் உனக்கு கிடைக்கப் பெறும். ஆதலால் எதையும் நேருக்கு நேராக சந்தித்துவிட்டு வெற்றி பெற்றால் ஜெயமாகட்டும் தோல்வியுற்றால் ஒரு சிறந்த அனுபவமாய் அமையட்டும்!
- தயக்கம் தடைகளை உருவாக்கும். இயக்கம் தடைகளை உடைக்கும்.
image - rachel ziv
- தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது. கஷ்டத்தை கொடுத்தவனுக்கு கஷ்டத்தை கொடுக்காதே. நீ அனுபவித்ததை தானே அவனும் அனுபவிக்க வேண்டும். விட்டு விடு நண்பா! புரிய முடிந்தால் புரிந்து கொள்ளட்டும்.
- உனக்கான இலக்கை தொடுவதல்ல வாழ்க்கை. உனக்கான உலகத்தை உருவாக்குவதே வாழ்க்கை!
- நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும், ஆனால், ஒரே நாளில் மாறிவிடாது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US