அப்பா எட்டி உதைப்பது நியாபகம் வந்தது... நடிகை வனிதாவின் ஷாக் பேச்சு
நடிகை வனிதா தந்தையை பற்றி புகழ்ந்து பேசிய தகவல் இணையத்தில் உலா வரத்தொடங்கி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகையாக விஜய் படங்கள் மற்றும் பல படங்களில் நடித்த வனிதா ரீ என்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும், அதன் பின் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலமும் பிரபலமானார்.
ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே, தற்போது தில்லு இருந்தா போராடு என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வனிதா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முதலில் இந்த திரைப்படத்தில் நான் ஒப்பந்தம் ஆனேன் எனக்கூறினார்.
மேலும், சிறுவயதில் சினிமா எனக்கு தேவையில்லைனு ஒரு முட்டாள் தனமான முடிவு எடுத்துவிட்டேன். ஆனால், நான் மீண்டும் விட்ட இடத்தைபிடிக்க வேண்டும்.
மீண்டும் ஒரு வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்து இருக்கிறார். மேலும், இத்திரைப்படத்தில் எட்டி உதைப்பது போல காட்சிகள் உள்ளது. இந்த காட்சியில் நடிக்கும் போது எனது அப்பாவின் ஞாபகம் வந்தது.
அவரை நினைத்து நான் பெருமை படுகிறேன். என் அப்பா விஜயகுமார் மாதிரி ஒரு டெடிகேட்டான ஆள பார்க்கவே முடியாது. நான் விஜயகுமாரின் பொண்ணுதான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளேன்.
அப்பாவை போல பல விருதுகள் வாங்கி, அவர் நடித்தது போல பல கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் கிட்ட நல்ல நடிகை என பெயர் எடுப்பேன் எனக்கூறி இருக்கிறார்.