இந்த மாதிரி நபர்கள் நிஜ வாழ்க்கையில் 1000 பேர் இருப்பார்கள்: பெண்களை ஊக்கப்படுத்தும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா!
எதிர்நீச்சல் சீரியலைப் போல பெண்களின் வாழ்க்கையில் 1000 குணசேகர் மாதிரி பல ஆண்கள் இருக்கிறார்கள் என சீரியலில் நடித்து வரும் ஹரிப்பிரியா தெரிவித்திருக்கிறார்.
எதிர்நீச்சல் ஹரிப்பிரியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் ஹரிப்பிரியா.
எதிர்நீச்சல் சீரியலை இவருக்காக பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். ஏனெனின் இவரின் நடிப்பு கொஞ்சம் வெகுளியாகவும் கொஞ்சம் கொஞ்சலாகவும் நகைச்சுவையாகவும் நடித்து அவருக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் முன்னதாக பல சீரியல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
குணசேகரன் போல பல ஆண்கள்
ஹரிப்பிரியா ஒரு பேட்டியில் எதிர்நீச்சல் குறித்து பல விடயங்களை பேசியிருந்தார் அதில், குணசேகரன் மாதிரி ஒருத்தர் உங்க வாழ்க்கையில் இல்லைன்னா நிச்சயம் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
அதை நினைத்து சந்தோசப்பட்டுக்கோங்க வெளியில் நம்மைச் சுற்றி, 1000 குணசேகரன்கள், 1000 கதிர்வேல்கள் இருக்காங்க. இவங்க எல்லாரையும் சமாளிச்சுட்டு தான் நாம ஒவ்வொரு நாளையும் கடந்து வர்றோம்.
அவர்களைப் பார்த்து ஒருநாளும் பயந்து ஓடக்கூடாது. பாரதியார் சொன்னது போல் ரெளத்திரம் பழக வேண்டும். யாருக்காகவும் நம் உரிமையை விட்டுக்கொடுக்ககூடாது. எதிர்த்து போராட வேண்டும் ஊக்கமாக பேசியிருக்கிறார்.