திடீரென வைரலாகும் சித்ராவின் அரிய புகைப்படங்கள்: பார்த்து கண்கலங்கும் நெட்டிசன்கள்!
பாண்டியன் ஸ்டோரில் முல்லையாக நடித்து மறைந்த சித்ராவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இந்தத் தொடரில் கதிருக்கு ஜோடியாக நடித்தவர் தான் முல்லை என்ற வி.ஜே. சித்ரா.
இவர் சின்னத்திரையில் நடிப்பு, நடனம், தொகுப்பாளர், மாடலிங் என பன்முகத்திறமைகளைக் கொண்டிருந்தார். இவருக்கு சின்னத்திரையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. அதன்பிறகு வெள்ளித்திரையிலும் ஒரு படத்தில் நடித்திருந்திருந்தார். அந்தத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டார்.
இவரின் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மறைந்த சித்ராவின் பல புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. இதனால் இணையவாசிகள் அதிகம் கவலையில் இருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |