வி.ஜே சித்ரா விட்டுட்டு போன கடைசி ஆல்பம் இது! ஶ்ரீ காந்த் தேவாவின் கண்கலங்க வைத்த பதிவு
பிரபல இசையமைப்பாளர் ஶ்ரீ காந்த் தேவா முதல் முறையாக மறைந்த சின்னத்திரை நடிகை வி.ஜே சித்ரா குறித்து பேசியுள்ளார்.
சின்னத்திரையில் அறிமுகம்
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமானவர் தான் நடிகை சித்ரா. இவரின் யதார்த்தமான நடிப்பால் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்ற சீரியலில் முல்லையாக நடித்து சீரியலை பிரபலமாக எடுத்து சென்றார்.
சித்ரா என்று சொல்லும் போது கூட தெரியாமல் இருப்பார்கள், ஆனால் இவரை முல்லை என்றால் தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அந்தளவு குறித்த கதாாபாத்திரம் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தது.
இவர் சின்னத்திரை நடிகை மட்டுமல்ல, நிகழ்ச்சி தொகுப்பாளர், டான்ஸர், சிறந்த பேச்சாளர், பிரபல யூடியூப்பர் என பல துறைகளை தடம் பதித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ஆம் ஆண்டு பிரபல ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரின் கணவர் தான் காரணம் என்று பல சர்ச்சைகள் எழுந்தது.
ஆனால் அதற்கான தேடல்கள் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இவரின் இழப்பு அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கு பாரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா பற்றி நாம் அறியாத மறுப்பக்கம்
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஶ்ரீ காந்த் தேவா அவர்கள் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியொன்றை வழங்கியிருந்தார்.
அந்த பேட்டியில் சித்ரா குறித்தும் பேசியிருந்தார், குறித்த பேட்டியில், சித்ராவின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய ஆல்பம் தான் இந்த “குண்டன் ஆல்பம்”. இதற்கு சித்ரா தான் அதிக நாட்டம் காட்டினார். சித்ரா அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் பிஸியாக நடித்து வந்தார்.
இருந்த போதிலும் குறித்த ஆல்பத்திற்காக இரண்டு நாள் கால்ஷீட் ஒதுக்கி செய்து கொடுத்தார். இதனை தொடர்ந்து குறித்த ஆல்பத்திற்கான பணத்தை சித்ராவிடம் கொடுத்தோம்.
ஆனால் சித்ரா அதனை வாங்க வில்லை. இதனால் சில நாட்கள் குண்டன் ஆல்பம் வெளியிடாமல் வைத்திருந்து, தற்போது வெளியிட்டுள்ளோம். மேலும், சித்ராவின் ஆசியோடு இப்போது வெளியாகிறது.
இந்த ஆல்பத்தை சித்ராவின் ரசிகர்கள், அவரின் பெற்றோருக்கு டெடிகேட் செய்கிறோம்." என பேசியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், சித்ராவின் மனதை பார்த்து பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.