கதிரை விட்டுப்போன முல்லை: கதையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்
கதிருக்கு நேரவிருந்த ஆபத்தை தனக்கு என வாங்கிக் கொண்டு உயிர் போகும் நிலையில் இருக்கும் முல்லை பரபரப்பான அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்ப ஒற்றுமையையும் அண்ணன் தம்பிகளின் பாசப் பிணைப்பையும் பறைசாற்றும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
இந்த நான்கு அண்ணன் தம்பிகளும் திருமணம் முடித்து ஒன்றாக ஒரே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ்வார்களா இல்லையா? என்பது தான் தொடரின் கதையாக தற்போது நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்தக் கதையில் அண்ணன் தம்பி இரண்டு பேரும் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டார்கள். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மூன்றாக பிரிந்து எல்லோரும் தனித்தனியே இருந்த நிலையில் ஐஸுவின் ஆடம்பர்த்தால் கடனாளியான கண்ணன் மீண்டும் அண்ணன் குடும்பத்துடன் இணைந்து விட்டார்.
உயிர்பிழைப்பாரா முல்லை?
பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய தினத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருந்தது. அதில் கதிரும் முல்லையும் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தபோது முல்லைக்கு பலகாரம் சாப்பிட வாங்கிக் கொடுத்து விட்டு சாப்பிட்டு எல்லாம் முடித்தவுடன் பாதையில் நடக்க ஆரம்பித்தார்கள்.
அப்போது கதிரின் பகையாளி ஒருவர் பைக்கில் வந்து விபத்தை ஏற்படுத்த எத்தனித்த வேளையில் அது முல்லை மீது அடிபட அவர் அப்படியே கீழே விழுந்திருக்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத கதிர் முல்லையை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்த வேளையில் கண்கள் இரண்டு சிவந்து அழுதுக் கொண்டே முல்லையில் கையைப் பிடித்து திடப்படுத்த கை நழுவி உயிர் போனது போல கதிரின் கையை விட்டு போனார் முல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |