பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு இவ்வளவு பெரிய மகனா? எவ்வளவு அழகு பாருங்க..
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா தனுஷின் மகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
மக்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஒரு கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.
இந்த சீரியல்களில் சுமார் 4 நாயகர்களும், 4 நாயகிகளும் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் வி.ஜே சித்ரா நாயகிகளில் ஒருவராக நடிக்கும் போது டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
இதனை தொடர்ந்து சித்ராவின் இடத்திற்கு முல்லையாக காவியா நடித்துக் கொண்டிருந்தார். இப்போது அவரும் வெளியேறி விட்டார்.
இதனால் மக்கள் மத்தியில் பெரியளவில் ரீச் இல்லாத காரணத்தால் தற்போது வீட்டிலுள்ள 3 நாயகிகளும் கர்ப்பமாக இருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீனாவை தவிர்த்து தனம், முல்லை, ஐசு என மூவரும் கர்ப்பமாக இருப்பதால் வீட்டிலுள்ள வேலைகள் அனைத்தையும் மீனாவும், ஜீவாவும் செய்து வருகிறார்கள்.
அம்மா உரித்து வைத்திருக்கும் அன்பு மகன்
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா தனுஷ் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவரின் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவரின் இன்ஸ்டா பக்கத்தில் மறக்காம வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தனத்தின் மகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள், “அம்மாவில் போல் இருக்கிறார்” என கமண்ட் செய்து வருகிறார்கள்.