விஜே சித்ரா மரணத்தில் தொகுப்பாளர் ரக்ஷனுக்கு தொடர்பு! பல உண்மைகளை உடைத்த ஹேமந்த்
விஜே சித்ரா மரண வழக்கில் பிரபல டிவி பிரபலத்துக்கும், ஓட்டல் ஓனர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக ஹேமந்த் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான விஜே சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறையிலிருந்த ஹேமந்த்
சித்ராவின் தற்கொலை அவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என சித்ராவின் பெற்றோரும், உறவினர்களும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் ஓராண்டுக்கு மேலாக சிறையிலிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த சில மாதங்களாக இந்த விவகாரம் குறித்து பேசாமல் இருந்து வந்த ஹேமந்த், தற்போது மீண்டும் பேட்டிகளைக் கொடுக்கத் தொடங்கி உள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்கிற பகீர் தகவலை வெளியிட்டு இருக்கிறார்.
தற்கொலைக்கு காரணம் இவர்களா?
அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷனுக்கும், அண்ணாநகரில் மெஸ் நடத்தி வரும் குறிஞ்சி செல்வனுக்கும் தொடர்பு இருப்பதாக ஹேமந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இருவரும் சித்ராவுக்கு பல வகைகளில் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ள ஹேமந்த், இதற்கான ஆதாரங்கள் எல்லாம் சித்ராவின் ஆண் நண்பரான ரோஹித்திடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தான் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்து தன்னிடம் ரோஹித் பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துகொண்டதாகவும், சித்ராவின் மரணத்தில் ரக்ஷனுக்கும் குறிஞ்சி செல்வனை தவிர வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதும் ரோஹித்திற்கு தெரியும் என கூறிய ஹேமந்த், சித்ராவிற்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா அல்லது பணத்தொல்லை கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.