viral video: பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக தூக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராஜ நாகத்தை அசால்ட்டாக கையாளும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்பு என்றால் அனைவருக்குமே ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது இயல்பு தான். குறிப்பாக ராஜ நாகம் என்றால் பெயரை கேட்டாலே சிலர் தலை தெறிக்க ஓடுவார்கள்.
ராஜ நாகங்கள் ஏனைய விஷம் கொண்ட பாம்புகளையே வேட்டையாடி உண்ணக்கூடியது. அதனை கண்டால் விஷம் கொண்ட பாம்புகளே பயப்படத்ததான் செய்கின்றது. அந்தளவுக்கு ராஜ நாகங்கள் கொடிய விஷத்தன்மை கொண்ட உயிரினமாக அறியப்படுகின்றது.
ராஜ நாகம் ஒரு தடவையில் வெளியேற்றும் விஷம் ஏறதாழ 20 மனிதர்களை கொள்ள போதுமானது என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றது.
அப்படிப்பட்ட கொடிய விஷம் கொண்ட ராச்சத ராஜ நாகத்தை நபரொருவர் அசால்ட்டாக தூக்கி வைத்திருக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் அசுர வேகத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |