சிறுநீரக நோயுள்ளவர்கள் மறந்தும்கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடலில் இருந்து அநேகமான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்வது இந்த சிறுநீரகங்கள் தான்.
ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. இவை இரண்டையும் நீங்கள் பாதுகாத்துக் கொண்டால் நீங்கள் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சில வாழ்க்கை முறை மாற்றங்களால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள். உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
மேலும், சிறுநீரகத்தை பாதுகாக்க சில உணவு முறைகளைப் பின்பற்றினால் தடுக்கலாம். அப்படி சிறுநீரக நோயாளிகள் இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் ஆபத்து.
சாப்பிடக் கூடாத உணவுகள்
பொதுவாகவே இறைச்சி உணவுகள் நமக்கு அதிகம் பிடித்த ஒன்று தான். ஆனால் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் பதப்பட்ட இறைச்சிகளை சாப்பிடும் போது சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
சிறுநீரக நோயுள்ளவர்கள் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் ஊறுகாயில் சோடியத்தின் அளவு அதிகமாக உள்ளது. உணவுகளில் அதிக உப்பு இருந்தால் உயர் இரத்த அழுத்தத்துடன் போராட வேண்டும். அதனால் துரித உணவுகள், பாக்கெட் உணவுகளை சிறுநீரக நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
புரதம் நிறைந்த உணவுகளான பருப்பு வகைகள், பீன்ஸ் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் .
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்றதல்ல.
இனிப்பு பானங்களும் சிறுநீரக நோயாளிகளுக்கு ஏற்றதல்ல. ஏனெனில் இதில் பாஸ்பேட் சிறுநீரக கல் உருவாகுவதற்கு காரணமாகவும், பிரக்டோஸ் சிறுநீரகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
வாழைப்பழத்தைப் போலவே உருளைக்கிழங்கிலும் அதிக பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரக நோயாளிகள் இதனை தவிர்ப்பது நல்லது.
பாஸ்பரஸ் நிறைந்த உணவுகள் சிறுநீரக நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும் அதே போலா பால், பருப்புக்கள், முழு தானிய உணவுகளை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |