வாழ்நாள் முழுவதும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த தவறு மட்டும் செய்யாதீங்க
வாழ்நாள் முழுவதும் சிறுநீரகங்கள் நன்றாக செயல்பட நம் பின்பற்றும் உணவுமுறை சரியானதாக இருக்க வேண்டும். இரண்டு சிறுநீரகங்களும் பலமாக கீழ்கண்ட விடயங்களை செய்யலாம்.
சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 2 - 3 லிட்டர் நீர் நிச்சயம் அருந்த வேண்டும். ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது.
ஓம இலை செய்யும் அற்புதம்
தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளலாம் புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை உணவில் சேர்த்து கொள்வது நலம்பெயர்க்கும்.
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே கழித்து விட வேண்டும்.
உணவில் உப்பு நிறைந்த பொருள் வேண்டாம்
உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். நாள் ஒன்றுக்குத் தேவையான சமையல் உப்பின் அளவு 5 கிராம் மட்டுமே.
உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக் கண்டம், சமையல் சோடா, வடாம், வத்தல், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், பாலாடைக்கட்டி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளையும் முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.