சிறுநீரக பிரச்சினை பாதிப்பா? சரிசெய்ய இதை மட்டும் செய்யுங்க....!
இன்றைய நவீன காலக்கட்டத்தில், ஆரோக்கியமற்ற உணவுகளால் பலரும் உடல் சார்ந்த பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அதிலும் சிறுநீரக பிரச்சினை பாதிப்பால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று. சிறுநீரகத்தின் செயல்பாடு, நம் உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டுவது.
சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால், இரத்தத்தை வடிகட்டும், சுத்தம் செய்யும் முக்கிய வேலை பாதிக்கும். மேலும், சிறுநீரக நோயில், சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாது.
இந்த பிரச்சினை, நாள் செல்ல செல்ல தீவிரமடையும். இதனால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்படும்போது, உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்ட முடியாமல் போவதால், உடலில் அரிப்பு, தசைப்பிடிப்பு, பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி, கால்கள் மற்றும் கணுக்காலில் வீக்கம், அதிக சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்க இயலாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாக தூங்க முடியாமலும் சிரமங்கள் ஏற்படும். கடைப்பிடிக்கவேண்டிய உணவு முறைகள்; சீரான உணவை உட்கொள்வதன் மூலம் நாள்பட்ட சிறுநீரக நோய் தீவிரமடைவதை தடுக்கலாம்.
உணவில் குறைந்த அளவு உப்பைப் பயன்படுத்துங்கள். மது அருந்துவதையும், புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். இந்த இரண்டு விஷயங்களும் நோயை மிகவும் தீவிரமாக்கும்.
நாள்பட்ட சிறுநீரக நோய் பிரச்சனையில் எடை கூடும். இதற்கு உணவு நிபுணரின் ஆலோசனையின் பேரில் உடல் எடையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும்.
உங்கள் நல்ல உணவு பழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் நோய் தீவிரமாவதை தடுக்கும். தொடர்ந்து 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன் தரும்.
நீரிழிவு பிரச்சினை இருந்தால், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும். நாள்பட்ட சிறுநீரக நோயின் போது நீரிழிவு பிரச்சினை நோயை தீவிரமாக்கும்.