சிறுநீரக பிரச்சினைக்கு தீர்வு தரும் சுவையான வாழைத்தண்டு சூப் - செய்வது எப்படி?
வாழத்தண்டை உணவில் சேர்த்துகொள்வதால் பல நன்மைகள் இருந்தாலும், முக்கியமாக சிறுநீரக பிரச்சினைக்கு பெரிதும் உதவுகிறது. கோடைக்காலத்தில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட இந்த வாழை தண்டை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
மாலை நேரத்தில் சூடான் வாழைத்தண்டு சூப் குடித்தால் போதும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக வெட்டிய இந்த வாழை தண்டுகளை தண்ணீரிலிருந்து எடுத்து தண்ணீரை வடிகட்டி ஒரு குக்கரில் போட்டு கொள்ளுங்கள். வாழைத்தண்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன், சேர்த்து குக்கரை மூடி 2 லிருந்து 3 விசில் வைக்க வேண்டும். வாழைத்தண்டுகள் நன்றாக வெந்திருக்கும். பின்பு வாழைத்தண்டை தாளித்து விடலாம்.
ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மீடியம் சைஸில் இருக்கும் – 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டுக்கொள்ளுங்கள்.
அதனுடன் பச்சை மிளகாய் – 1 மட்டும் போட்டு, வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை நன்றாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக வெங்காயத்தை மீண்டும் ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வேகவைத்து குக்கரில் இருக்கும் வாழைத் தண்டை அப்படியே தண்ணீரோடு இந்த கடாயில் ஊற்றி விடுங்கள்.
வேக வைத்திருக்கும் தண்ணீர் மட்டும் போதாது. அதன் பின்பு மீண்டும் 1/2 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு 3 நிமிடங்கள் வரை இந்த வாழைத் தண்டு சூப்பை கொதிக்கவிடுங்கள்.
இந்த சூப் கொதித்து வருவதற்குள் ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன், அளவு கான்பிளவர் மாவு போட்டு, 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து இந்த கரைசலை சூப்பில் ஊற்றி மீண்டும் 2 நிமிடம் கொதிக்க வைக்கவேண்டும்.
இறுதியாக 1 – டேபிள்ஸ்பூன் மிளகுத் தூளை தூவி கலந்து விட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை தூவி கொள்ளலாம். அவ்வளதாங்க சுவையான சூப்பரான வாழைத்தண்டு சூப் தயார்..