உடம்பில் இந்த மாற்றம் ஏற்படுகின்றதா? அப்போ சிறுநீரகத்தில் பிரச்சினை ஜாக்கிரதை
நமது உடலில் சிறுநீரகங்கள் பிரச்சினையை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
சிறுநீரகம்
நமது உடம்பில் இருக்கும் இரண்டு சிறுநீரகங்களின் வேலை என்னவெனில் ரத்தத்தினை சுத்தப்படுத்துவது ஆகும். உடம்பில் உள்ள அழுக்குகளை சிறுநீர் மூலம் சிறுநீரகம் வெளியேற்றுகின்றது.
முக்கிய உறுப்பாக கருதப்படும் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்பட்டால், அவை படிப்படியாக வேலை செய்வதை நிறுத்திவிடும்.
சிறுநீரகங்கள் நமது உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்த அழுத்தத்தை சீராக்குவது, மட்டுமின்றி உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது.
சிறுநீரகம் வேலை செய்யாமல் முற்றிலும் செயல் இழந்துவிட்டால், உடம்பில் உள்ள கழிவுகளால் பல பிரச்சினை ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தும்.
இந்த பதிவில் சிறுநீரகங்கள் பலுதடைந்துவிட்டால், என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
அறிகுறிகள் என்ன?
கால்கள் மற்றும் கண்கள் மட்டுமின்றி பிற உறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டால் சிறுநீரகங்கள் பலவீனமடைவதாக அர்த்தம்.
சிறுநீரின் அளவு மாற்றம், நிறம், கடுமையான துர்நாற்றம் இவையும் சிறுநீரக பிரச்சினைக்குரிய அறிகுறியாகும்.
இதயத்துடிப்பு, தலைசுற்றல் போன்ற பிரச்சினை ஏற்பட்டால் சற்று உஷாராகவே இருக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்த பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் உடம்பில் சிறுநீரகங்கள் பிரச்சினை ஏற்படுகின்றது என்று அர்த்தம்.
சோர்வு மற்றும் பலவீனங்கள் ஏற்பட்டாலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். இவையும் சிறுநீரக பிரச்சினையின் அறிகுறியாகும்.
சிறுநீரக செயல்பாடு குறைவதால் வயிற்று வலி மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எந்தவொரு காரணம் இல்லாமல் உடல் எடை அதிகரித்தால் சிறுநீரகம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம். ஆகவே மேலே சிறுசிறு அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியமாக இருக்க வேண்டாம். உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |