பாரம்பரிய முறையில் காரசாரமான நண்டு மசாலா குழப்பு... எப்படி செய்வது?
பொதுவாக அனைவருக்குமே சுவையாக சாப்பிடுவது மிகவும் பிடித்தமாக விடயமாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை விதவிதமாக சாப்பிடுவது வரம் என்றே சொல்ல வேண்டும்.
அசைவத்தில் பலவித உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.அசைவத்தில் கோழி,மீன் ,இறால், நண்டு, என்று பெரிய பட்டியலே இருக்கின்றது.
அசைவ உணவுகள் சாப்பிடுவதில் பெரும்பாலும் கடல் உணவு பிரியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.
அதிலும் நண்டு குழம்பு என்றால் பலருக்கும் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
நண்டின் ஓட்டை உடைத்து சாப்பிட எவ்வளவு சிரமப்பட்டாலும் அதன் உள்ளே இருக்கும் சுவையான சதையை சாப்பிடுவது அனைவருக்குமே பிடித்தமான காணப்படுகின்றது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் காரசாரமான நண்டு மசாலா குழம்பு எவ்வாறு எளிமையாக செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் - 2 தே.கரண்டி
கறிவடகம் - 1/2 உருண்டை
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை
துருவிய தேங்காய் - 1 கப்
பெருஞ்சீரகம் - 2 தே.கரண்டி
செய்முறை
முதலில் நண்டை சுத்தம் செய்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் துருவிய தேங்காய் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவடகத்தை சேர்த்து கருகவிடாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.பின்னர் அதில் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கிளறிவிட வேண்டும்.
பின்னர் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும்.
இறுதியில் கறிவேப்பிலையை சேர்த்து இறக்கினால் வீடே மணமணக்கும் காரசாரமான நண்டு மசாலா குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |