ஜப்பான் கோவில்களில் மந்திரம் சொல்லும் 'ரோபோ' துறவி - காரணம் என்ன?
ஜப்பானில் மனிதத் துறவிகள் குறைவாக உள்ள நிலையில், கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ துறவியை உருவாக்கியுள்ளனர்.
'ரோபோ' துறவி
ஜப்பானில் மனிதத் துறவிகள் இல்லை. இதை இல்லாமல் செய்ய கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ரோபோவை கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த ரோபோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய 'ரோபோ' வாகும்.

புத்த மதத்தின் மிகக் கடினமான புனித நூல்களை கூட எல்லாம் இந்த ரோபோ கற்றுள்ளது என கூறப்படுகின்றது. இந்த ரோபோ மனிதர்களிடம் வெளிப்படையாக கூறத் தயங்கும் தனிப்பட்ட கேள்விகளுககு கூட மிகவும் தெளிவாக பதிலளிக்கிறது எனப்படுகின்றது.
2 கால்களைக் கொண்ட இந்தடி மனித வடிவ ரோபோ கோவில்களில் மந்திர ஓதுதல், மதச்சடங்குகள் நடாத்தல் போன்ற பணிகளைச் செய்யக்கூடியது.

எனவே எதிர்காலத்தில் மனிதத் துறவிகளை மாற்றி, ஆன்மிகப் பணிகளை முன்னெடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில் மனிதத் துறவிகளுக்குப் பதிலாக இந்த ரோபோ துறவிகளே ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் இந்த நவீன ஆன்மிகப் புரட்சி உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |