இரண்டு முறை அபார்ஷன்! 42 வயதில் கர்ப்பமாகிய பிரபல சீரியல் நடிகை
பிரபல சீரியல் நடிகையான ஜுலி தனது 42 வயதில் கர்ப்பமாகியுள்ள செய்தியை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஜுலி
சின்னத்திரை பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஜுலி. இவரது உண்மையான பெயர் விசாலாட்சி ஆகும். இவர் பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில இடங்களில் வில்லியாக நடித்து ரசிகர்களை கோபப்படுத்தவும் செய்துள்ளார்.
நிஜ வாழ்வில் மென்மையான இவர் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து பேசியுள்ளார். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் குழந்தை இல்லாமல் மன வேதனையில் இருந்துள்ளார்.
காதல் திருமணம் செய்த இவருக்கு முதல் குழந்தை கருவுற்ற போது அது கலைந்துவிட்டதாகவும், இரண்டாவது முறை கருவுற்ற போது கர்ப்பப்பை குழாயில் கரு உருவானதால் அதையும் கலைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக கர்ப்பமான போது, தான் மிகவும் பயந்ததாகவும் ரிசல்ட் பாசிடிவ் என வந்தவுடன் தான் உடைந்து அழுது விட்டதாகவும் பேசியிருக்கிறார்.
சற்று வயதாகிவிட்டதால், மருத்துவ சிகிச்சை மூலம் தற்போது கர்ப்பமாகிய இவர், 5 மாதங்கள் வரை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.
வெளியிடங்களுக்கும் செல்வதை தவிர்த்த இவருக்கு, சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. நடிகை ஜுலியின் வேதனையை கேட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருவதுடன், பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |