விஜய் - சங்கீதா விவாகரத்து - நடிகை குஷ்புவின் பரபரப்பு பேட்டி
சங்கீதா விஜய் விவாகரத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகை குஷ்பு சிறந்த பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய்,சங்கீதா
விஜய்க்கும், அவரின் ரசிகையான சங்கீதா சொர்ணலிங்கத்துக்கும் 1999ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. முன்னதாக 1998ம் ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் பதிவுத் திருமணம் நடந்தது.
இந்நிலையில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றிருக்கிறார் சங்கீதா. சுமார் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளார் சங்கீதா.
இது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து நடிகை குஷ்புவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு குஷ்பு சிறந்த பதிலடியை கொடுத்துள்ளார்.

நடிகை குஷ்பு
சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.
தனிப்பட்ட வாழ்க்கையில் யாருக்கும் என்ன பிரச்சினை வேனாலும் இருக்கலாம்.
கணவன் மனைவி இடையில் இருக்கும் பிரச்சினை பற்றி பேச நாம் யாருக்கும் உரிமை இல்லை, மக்களுக்கு நாம் என்ன செய்ய முடியும் என்ன செய்தால் மக்கள் நன்மை பெறுவார்கள் என்பதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும் "என்று பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |