எலும்பு தெரியும் அளவிற்கு ஒல்லியான கீர்த்தி...! அழகின் சீக்ரெட் இதுதானா?
கீர்த்தி சுரேஷின் உடல் எடையைக் குறைத்தது எப்படி என்பது குறித்த சீக்ரெட் தற்போது வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி.
அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ரஜினி முருகன் திரைப்படம் தான்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ராசியோ என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது.
விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு நடிகையர் திலகம் படத்தை நடித்து பிரபல நடிகைகளில் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு என கலக்கத் தொடங்கிய கீர்த்தி, அண்மையில் கூட நடிகர் நானியுடன் இணைந்து 'தசரா' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார்.
வெயிட் லோஸ் சீக்ரெட்
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் உடல் எடையைக் குறைத்து படும் ஒல்லியாக மாறியிருந்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதனாலேயே இவர் எடையைக் குறைத்து கவர்ச்சிக்கு மாறிவிட்டார் என பேச ஆரம்பித்ததார்கள்.
இந்நிலையில் தான் 20 கிலோ வரையில் எடையைக் குறைத்தது எப்படி என்பது பற்றி தற்போது கூறியிருக்கிறார்.
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கிய போது அவர் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவுகளை மாத்திரம் எடுத்துக் கொண்டுள்ளார்.
அதேநேரத்தில் அசைவ உணவுகளை விட்டு விட்டு சைவ உணவையே அதிகம் சாப்பிட ஆரம்பித்தாராம். மேலும், இவர் 30 நிமிடங்கள் கார்டியோ. 20 நடைப்பயிற்சி செய்வாராம். அது மட்டுமின்றி ஜிம்மில் வெயிட் லிபிட்டிங் செய்து உடல் எடையை குறைத்துள்ளாராம்.