ஒரு கேள்வி கேட்டா இப்படியா பதில் சொல்றது...! திருமணம் குறித்து புகைப்படத்தில் பதில் சொன்ன கீர்த்தி
இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து கேள்வி கேட்டதற்கு மிகவும் நகைச்சுவையாக வடிவேலு புகைப்படத்தை வெளியிட்டு பதிலளித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி. அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ரஜினி முருகன் திரைப்படம் தான்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ராசியோ என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது.
விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு நடிகையர் திலகம் படத்தை நடித்து பிரபல நடிகைகளில் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு என கலக்கத் தொடங்கிய கீர்த்தி, அண்மையில் கூட நடிகர் நானியுடன் இணைந்து 'தசரா' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார்.
திருமணம் எப்போது?
அண்மையில் கீர்த்தி சுரேஷ் தான் ட்ரெண்டில் போய்க் கொண்டிருந்தார். எதற்காக என்றுக் கேட்டால் நடிகர் விஜய்யுடன் காதல் கொண்டுள்ளதாகவும் அதிகமாக கிசுகிசுக்கப்பட்டது.
மேலும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக அவர் தொழிலதிபர் ஒருவரைக் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியது.
தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு வடிவேலுவின் நகைச்சுவைப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிலளித்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்தால் திருமணமெல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல பதிலளித்திருக்கிறார்.