புத்தாண்டு பலன்கள் 2022 - குருவின் அருளால் அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசியினர்கள் யார்?
புத்தாண்டு 2022 முதல் கன்னி மற்றும் தனுசு ராசியினர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியினர்களுக்கு சனி பகவான் 29 ஏப்ரல் 2022 முதல் 12 ஜூலை 2022 வரை ராசிக்கு 6ம் இடமான ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு அதிசாரமாக செல்வது கூட சிறப்பான பலனைத் தரக்கூடிய அமைப்பாக இருக்கும்.
இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சிகளை அடைவீர்கள். குரு பகவான், ஏப்ரல் 13ம் தேதி அதிசாரமாக ராசிக்கு 7ம் வீடான சமசப்தம ஸ்தானத்திற்குச் செல்ல உள்ளார்.
இதன் காரணமாக பல அற்புத பலன்கள் ஏற்படும். மேலும், சுப காரியத்தில் நீங்கள் ஈடுபட்டால், அது கைகூடக்கூடிய நல்ல தகவல் கிடைக்கும். குருவின் இந்த மாறுதலுக்குப் பிறகு பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.
சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிகரமான செயல்பாடு நடக்கும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை, விட்டுக்கொடுத்துச் செல்லுதல் என பல்வேறு வளமனான பலன்கள் ஏற்படும்.
வழிபாடு
துர்க்கை அம்மன் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வதால் சகல சௌபாக்கியங்களைப் பெற்று வாழலாம்.
தனுசு
தனுசு ராசியினர்களுக்கு எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் நடக்க இருக்கிறது. செலவுகள் உங்களை திக்குமுக்காட செய்தாலும் வரக்கூடிய செலவுகள் சுப செலவுகளாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடையலாம். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அலைச்சலும், விரயங்களும் ஏற்படலாம்.
கணவன் -மனைவிக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். தொலைந்து போன கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் ஆண்டாக இவ்வாண்டு உங்களுக்கு அமைய இருக்கிறது.
இதுவரை மந்த நிலையில் இருந்த வருமானம் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. செலவுக்கு ஏற்ப வரவும் வரக் கூடிய அற்புத பலன்கள் உண்டு. புதிய ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை பெருமளவு கைகொடுக்க இருக்கிறது.
தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்க கூடிய அற்புத ஆண்டாக இவ்வாண்டு அமைய இருக்கிறது.
வெளியில் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இவ்வாண்டில் தியானம், யோகா போன்ற மன அமைதி தரும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
கணவன், மனைவி இடையே இருக்கும் காதல் மேலும் அதிகரிக்கும். இவ்வாண்டு சாதகமான ஆண்டு என்பதால் திருமண வைபவங்கள் கைகூடி வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு பல எதிர்ப்புகளையும் தாண்டி உங்கள் காதல் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.
சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும். துன்பங்கள் தீர ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கான உதவிகளை செய்து வாருங்கள்.