கொஞ்ச நேரத்தில் சில்க் ஸ்மிதாவாக மாறிய கீர்த்தி சுரேஷ்: காட்டுத்தீயாய் பரவும் கீர்த்தியின் புகைப்படம்!
நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த கவர்ச்சி நடிகை போல போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
நடிகை கீர்த்தி
சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி. அந்தப் படத்தில் அறிமுமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ரஜினி முருகன் திரைப்படம் தான்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து ராசியோ என்னவோ தெரியவில்லை அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது.
விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு நடிகையர் திலகம் படத்தை நடித்து பிரபல நடிகைகளில் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு என கலக்கத் தொடங்கிய கீர்த்தி, அண்மையில் கூட நடிகர் நானியுடன் இணைந்து 'தசரா' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது விஜய்யுடன் அதிகமான கிசுகிசுக்கப்பட்டும் வருகின்றார் என்பதும் குறிப்படத்தக்கது.
சில்க் ஸ்மிதாவாக மாறிய கீர்த்தி
இந்நிலையில் கீர்த்தியின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
அப்படியென்ன புகைப்படம் என்று பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு சில்க் ஸ்மிதாவை நினைவுப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார்.
தசரா படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும். அந்த செட்டின் கீழ் நின்று கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படத்தை எடுத்து feel it like silk என பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.