விஜய் சங்கீதாவிற்கு காதல் திருமணம் இல்லை.... உண்மையை போட்டுடைத்த தாய் ஷோபா
விஜய்க்கும், சங்கீதாவிற்கும் காதல் திருமணம் இல்லை என்று விஜய் தாய் ஷோபா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது.
உண்மையை போட்டுடைத்த தாய் ஷோபா
சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் விஜய், சங்கீதா விவாகரத்து பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், இது குறித்து, விஜய், சங்கீதா தரப்பில் எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நடிகர் விஜய் அம்மா ஷோபா இதுகுறித்து பேசுகையில், என் பேரப்பிள்ளைகளை எந்த ஒரு அம்மாவும் இப்படி பார்த்துக்கொள்ள மாட்டார்கள்.
அந்த அளவிற்கு சங்கீதா எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வார். விஜய்யின் பசங்க ரொம்ப லக்கி.
விஜய்க்கு ஏன் லண்டன் பெண்ணை திருமணம் செய்தீர்கள் என்று பேட்டியில் கேள்வி கேட்க அதற்கு ஷோபா, 1996ம் ஆண்டு சங்கீதாவும், அவரது சகோதரி தீபாவும் விஜய்யை பார்க்க என் வீட்டிற்கு வந்தார்கள்.
அப்போது என் வீட்டு காவலர் விஜய் படப்பிடிப்பு சென்று விட்டார் என்று சொன்னதும், சங்கீதா நேராக விஜய்யை பார்க்க படப்பிடிப்பு தளத்திற்கே சென்றுவிட்டார்.
அப்போது விஜய் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இவர்களை பார்த்ததும் விஜய் பேசிவிட்டு, என் வீட்டிற்கு போங்கள்... நான் வரேன் என்று கூறிவிட்டார்.
இதன் பிறகு சங்கீதா விஜய்யுடன் நட்பாக பழகினார். 1997ம் ஆண்டு விஜய்யை மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தார்.
என் கணவருக்கு சங்கீதாவை ரொம்ப பிடித்து விட்டது. அதன் பிறகு தான் விஜய்யிடம் பேசி இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தோம். எல்லாம் கடவுள் சித்தம் என்றார்.