பிரபல இயக்குநரின் மனைவி கொரோனாவால் உயிரிழந்தார் - வேதனையில் சுரேஷ் சக்ரவர்த்தி
இயக்குநர் அருண் ராஜா காமராஜா பன்முகத் திறமை கொண்டவர்.
இன்று இளம் நடிகராக வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயனின் நண்பரான அருண்ராஜா காமராஜா தொடக்ககாலத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.
இந்த நிலையில்தான் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி இந்த தகவலை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து பலரும் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினரும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இப்படி அடுத்தடுத்து மரணிப்பது பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.