91 வயதில் காதலில் விழுந்த தொழிலதிபர்: எத்தனைக் கோடிக்கு சொந்தக்காரர் தெரியுமா?
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை கொண்ட 91 வயதான தொழிலதிபர் பெண் ஒருவரைக் காதலிப்பதாக தெரிவித்த தகவல் தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
தொழிலதிபர்
91 வயது கொண்ட டி.எல்.எப் குழுமத்தின் முன்னாள் தலைவரான குஷால் பால் சிங் காதலில் விழுந்துள்ளார். இவர் கே.பி.சிங் என தான் பலராலும் அறியப்பட்டது.
தனிமையான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருந்த இவர் தற்போது ஷீனா என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.
இவர் டிஎல்எப் நிறுவனத்தில் 1961ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாக அந்த நிறுவனத்தை தலைமை பொறுப்பை தன் வசம் வைத்திருக்கிறார்.
இவர் முன்னதாக உலகின் பணக்காரர் பட்டியலில் 8 இடத்தைப் பெற்றவர் எனவும் தற்போதைய நிலவரப்படி 8 பில்லியன் டொலர் (66 கோடி) சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்.
மேலும், சிங் ஏற்கனவே திருமணமானவர். இவரது மனைவி இந்திரா சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி 2018ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
65 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த மனைவியை பிரிந்ததால் மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட இவர் தொழில்ரீதியாக இடைவெளி எடுத்துக் கொண்டார்.
மீண்டும் மலர்ந்த காதல்
குஷால் பால் சிங் வெகுகாலம் கழித்து தான் காதலிப்பதாக அறிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் நேர்காணல் ஒன்றும் கொடுத்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,
தன் காதலியின் பெயர் ஷீனா, அவள் சிறந்த பெண்மணி. இறந்து போன என் மனைவியின் பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, இவ்வாறு பிரிவால் வாடும் போது தான் ஷீனா தன் வாழ்வில் முக்கிய இடம் பிடித்ததார் மேலும், ஷீனா தன்னை ஊக்கப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.