நடிகர் சிம்புவின் திருமணம் எப்போது? தந்தை ராஜேந்தர் உடைத்த உண்மை
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து தந்தை டி.ராஜேந்தர் வெளிப்படையாக பேசியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிம்பு
பெண் ரசிகைகளின் கனவு நாயகனாக வலம்வரும் சிம்பு, தற்போது 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.
தனது தந்தை டி.ராஜேந்தர் போல பன்முக திறமைகளை கொண்ட சிம்பு அவ்வப்போது பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.
நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, நிதி அகர்வால் என பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.
சமீபத்தில் கூட நடிகை லட்சுமி மேனனை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது, ஹன்சிகா, நயன்தாரா இருவரும் தனது காதலர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது சிம்புவின் திருமணம் குறித்த பேச்சும் வைரலாகி வருகின்றது.
தந்தை கூறியது என்ன?
சிம்பு திருமணம் குறித்து மகன் டி ராஜேந்தர் கூறுகையில், தனது மகன் சிம்புவிற்கு சீக்கிரமே திருமணம் நடைபெறும் என்றும், மகனுக்கு பிடித்த பெண்ணை நானோ, என் மனைவியோ தெரிவு செய்வதை விட, கடவுள் என் மகனுக்கு பிடித்த பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தன்னிடம் பலரும் சிம்புவின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பிவரும் நிலையில், கடவுளின் அருளால் சீக்கிரமே திருமணம் நடைபெறும் என்று ராஜேந்தர் கூறியுள்ளார்.
தந்தை ராஜேந்தர் இவ்வாறு கூறியுள்ளதையடுத்து, வரும் ஆண்டு சிம்புவின் திருமணம் கட்டாயம் நடைபெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.