இந்த வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் புண்களுக்கு மருந்தாகும் மணத்தக்காளி தோசை!
பொதுவாகவே இப்போதுள்ளவர்களுக்கு அடிக்கும் வெயிலால் உடலில் ஒரு வகையான புண்கள் ஏற்படும்.
இந்தப் புண்கள் உங்கள் உடலில் வந்து விட்டதும், அரித்துக் கொண்டே இருக்கும் இதை சொரிய போனால் அது உடலில் பரவ ஆரம்பிக்கும் இதனைப் போக்குவதற்கு மணத்தக்காளி சிறந்த மருந்தாகும். இந்த மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம்.
அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். அதே போல உடலில் ஏற்படும் புண்களையும் இல்லாமல் போக்கும்.
இந்த மணத்தக்காளி கீரையில் தோசை செய்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் புண்கள் மறைந்து போகும், இந்த கீரை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி - 1/2 கிலோ
- உளுந்து - 150 கிராம்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 5 பல்
- இஞ்சி - ஒரு சிறு துண்டு
- சீரகம் - 1/4 தேக்கரண்டி
- மிளகு - 1/4 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 3
- கொத்தமல்லி - சிறிதளவு
- மணத்தக்காளி கீரை - இரண்டு கைப்பிடி
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் இட்லி அரிசி மற்றும் உளுந்தினை இட்லிக்கு அரைக்க கூடிய பதத்தில் ஊறவைத்து, ஊறிய பிறகு கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.
இதனை அடுத்து இந்த இரண்டு பொருட்களும் அரைபடும்போதே எடுத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், கொத்த மல்லி, மணத்தக்காளி கீரை இவற்றையெல்லாம் நன்கு கழுவி அதனோடு போட்டு அரைத்து விடுங்கள்.
பிறகு இதற்கு தேவையான அளவு உப்பினை சேர்த்துக் கொள்ளவும்.
மேலும் மாவு அரைத்த மூன்று மணி நேரத்துக்குப் பின்பு நீங்கள் இந்த தோசையை சுட்டு எடுக்கலாம்.
இப்போது நீங்கள் தோசை கல்லில் மணத்தக்காளி கீரை தோசையை சுட்டு எடுத்து பரிமாறலாம்.