மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் இந்த கீரை தோசை செய்து சாப்பிடுங்க! வலிகள் பறந்தோடும்
பொதுவாகவே இப்போதுள்ளவர்கள் அடிக்கடி மூட்டுவலியால் அதிகம் அவதிப்படுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வாக முடக்கத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிட்டு வர மூட்டுவலி குணமாகும்.
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூல நோய்கல், வாயுத் தொல்லை போன்ற பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.
இந்த முடக்கத்தான் கீரைக் கொண்டு தோசை செய்து சாப்பிட்டால் சிரியவர் முதல் பெரியவர் வரை இருக்கும் மூட்டு வலிகளுக்கு சிறந்த தீர்வாக அமையும்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 2 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
முடக்கத்தான் கீரை – 3 கப்
உப்பு – தேவைக்கேற்ப
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு – 3 பல்
சின்ன வெங்காயம் – 5
செய்முறை
இட்லி அரிசி, வெந்தயம் இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து 3 மணிநேரம் ஊறவைக்கவும்.
பின்னர் கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு அரைத்து இரவு முழுவதும் புளிக்க விடவும். இப்போது முடக்கத்தான் கீரை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன், மிளகு, சீரகம், பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த முடக்கத்தான் விழுதை, தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைக்கவும்.
அடுத்ததாக அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் மாவு ஊற்றி பின், சுற்றி எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறலாம்.