பல நோய்களை தீர்க்கும் மணத்தக்காளி கீரை சூப் செய்வது எப்படி?
மருத்துவ மூலிகையான மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அபரிமிதமான சத்துக்களை கொண்டு வந்து சேர்க்கும்.
இதன் இலை, காய் பழம், வேர் ஆகிய அனைத்துமே பலன்களை கொண்டுள்ளது.
வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றுவதுடன், சளியை நீக்கி உடலை வலுப்பெறச் செய்கிறது.
இந்த கீரையில் செய்யப்படும் உணவுகளை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவருமே சாப்பிடலாம்.
இந்த பதிவில் கீரையை கொண்டு சூப் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி கீரை- 1 கட்டு
பாசிப்பருப்பு- 100 கிராம்
தக்காளி- 1
வெங்காயம்- 1
பூண்டு- 5 பல்
மிளகு, சீரகம்- தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வாணலியில் சேர்த்து பின் மிளகு, சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அரைத்துக் கொள்ளவும்.
பாசிப்பயிறை மசிய வேகவைத்து கீரையுடன் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு சேர்த்து பரிமாறினால் சுவையான ஆரோக்கியமான சூப் தயார்!!!