சுவையான உளுந்தங்களி செய்வது எப்படி? பெண்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருமாம்
உளுந்தங்களி சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அதிகம் அளிக்கிறது. உளுந்தில் புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துகள் அதிகம் உள்ளன.
மேலும் பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றை தந்து இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துகிறது. தற்போது சுவையான உளுந்தங்களி எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையானவை
கறுப்பு உளுந்து - கால் கப்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
பச்சரிசி - ஒரு டேபிள் ஸ்பூன்
கருப்பட்டி - முக்கால் கப்
நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
sharmispassions
செய்முறை
கறுப்பு உளுந்து, வெந்தயம், அரிசியை இரண்டு முறை நன்கு கழுவி, பின்பு 2 கப் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
இதை மிக்ஸி ஜாரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.
கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி, கருப்பட்டி சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொதிக்க விடவும்.
கருப்பட்டி நன்கு கரைந்ததும் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஒரு கனமான கடாயில் வடிகட்டிய கருப்பட்டி கரைசலைச் சேர்த்துக் கொள்ளவும்.
அதில் நல்லெண்ணெய் மற்றும் அரைத்த மாவைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
களி நன்கு கெட்டியாகவும் கடாயில் ஒட்டாமலும் வந்ததும் எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி ஆறியதும் சாப்பிடவும்.
in.pinterest